/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் கட்சி அதிருப்தியாளர்களை சரிக்கட்ட சமரசம்மதுரையில் கட்சி அதிருப்தியாளர்களை சரிக்கட்ட சமரசம்
மதுரையில் கட்சி அதிருப்தியாளர்களை சரிக்கட்ட சமரசம்
மதுரையில் கட்சி அதிருப்தியாளர்களை சரிக்கட்ட சமரசம்
மதுரையில் கட்சி அதிருப்தியாளர்களை சரிக்கட்ட சமரசம்
ADDED : செப் 29, 2011 01:44 AM
மதுரை : மதுரையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தியாளர்களை சமரசம் செய்யும் முயற்சியில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் சார்ந்த சமுதாய மக்களை அணுகி அதிருப்தியாளர்களை சரிகட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க உள்ளன. அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில் நேற்று முன் தினம் வரை மாற்றங்கள் இருந்தன. அ.தி.மு.க.,வில் 'சீட்' கிடைத்து, பறிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தற்போதைய கவுன்சிலர்கள் சிலர், மீண்டும் அதே வார்டில் போட்டியிடுகின்றனர். ஐந்தாண்டுகளாக சொல்லிக் கொள்வது போல் எந்த பணியையும் செய்யாத இவர்களுக்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த அதிருப்தியையும், 'சீட்' கிடைக்காமல் 'உள்குத்து' வேலையில் ஈடுபடும் அதிருப்தியாளர்களையும் சமாளிப்பதே கட்சி நிர்வாகிகளுக்கு முதல் 'தேர்தல்' பணியாக உள்ளது. 'நம்ம வேட்பாளரை வெற்றி பெற வச்சிடுங்க. உங்களுக்கு வாரிய உறுப்பினர் போன்ற பதவிகளை 'அம்மா'விடம் பெற்று தருகிறோம்' என்று ஆளுங்கட்சி தரப்பில் சமரச முயற்சிகள் நடக்கின்றன. தி.மு.க.,விலோ 'சீட்' கிடைக்காதவர்கள் பெயரளவிற்கு தேர்தல் பணியை மேற்கொண்டுள்ளனர். சிலர் தங்கள் சொந்த தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
எல்லோரும் தனித்தனியாக போட்டியிடும், இத்தேர்தலில் அந்தந்த வார்டில் மெஜாரிட்டியாக உள்ள சமுதாய மக்களை நம்பிதான் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 'நானும் அதே சமுதாயக்காரன்தான் என்பதால் நிச்சயம் ஓட்டு அளிப்பார்கள்' என்று சிலர் சுயேச்சையாக களத்தில் நிற்கின்றனர். இவர்களையும், கட்சி அதிருப்தியாளர்களையும் சமாளிக்க, தற்போது கட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், ஒவ்வொரு சமுதாய மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். வீதி வீதியாக பிரசாரம் செய்யாத நிலையில், இந்த 'திண்ணை பிரசாரம்' சூடுபிடித்துள்ளது.