ADDED : செப் 28, 2011 01:07 AM
நாமக்கல்: கொல்லி மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய, ஐந்து பேரை போலீஸார்
கைது செய்து, 47 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான சாராய ஊறலை அழித்தனர்.
கொல்லிமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த நல்லதம்பி (40),
குண்டூர்நாடு பொன்னுசாமி (50), ஆரியூர்நாடு அய்யாசாமி (60), எடப்புளிநாடு
துரைசாமி (26), ஆரியூர்நாடு பொன்னுசாமி (59) ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது
செய்தனர். அவர்களிடம் இருந்த, 47 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான சாராய
ஊறல், 2,500 ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்து
அழிக்கப்பட்டன.