/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/முக்கூடல் அருகே மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்முக்கூடல் அருகே மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
முக்கூடல் அருகே மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
முக்கூடல் அருகே மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
முக்கூடல் அருகே மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : செப் 16, 2011 01:50 AM
முக்கூடல் : முக்கூடல் அருகே நூதன முறையில் மணல் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பொன்நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டயிட்டனர். அதில் லாரி உட்பகுதியில் மணல் பரப்பி அதன் மேல் தார்பாய் விரித்து அதற்குமேல் கிரஷர் பொடியை நிரப்பி நூதன முறையில் மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து திருட்டுதனமாக மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் முக்கூடல் பகுதியை சேர்ந்த சின்னமணியை கைது செய்தனர். இதுகுறுத்து போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான லாரி உரிமையாளர் ஜஸ்டின் அம்புரோஸை தேடி வருகின்றனர்.


