பெரியகுளத்தை பசுமை நகராட்சியாக்குவேன்
பெரியகுளத்தை பசுமை நகராட்சியாக்குவேன்
பெரியகுளத்தை பசுமை நகராட்சியாக்குவேன்
பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சியை பசுமை நகராட்சியாக மாற்றுவதுடன், தென் மாவட்டங்களின் முதன்மை நகராட்சியாக மாற்றுவேன் என அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.ராஜா உறுதியளித்துள்ளார்.பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளராக இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுபவர் ஓ.ராஜா, 54.
ஓ.ராஜா கூறியதாவது:நான் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றால், அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும் வகையில், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம் வழங்குவேன். அ.தி.மு.க., அரசு செயல்படுத்தி வரும் அத்தனை நலத்திட்டங்களையும் நகராட்சி மக்கள் அத்தனை பேருக்கும் பெற்றுத்தருவேன்.கோவில், சர்ச், பள்ளிவாசல் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். சோத்துப்பாறையிலிருந்து- குழாய்தொட்டி வரைக்கும் குழாய் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவேன். தெருவிளக்குகள், ரோடு வசதிகள் மேம்படுத்தப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும். காலி வீட்டு மனைகளுக்கு பிளான் அப்ரூவல் உடனடியாக கொடுக்கப்படும். வராகநதி சுத்தப்படுத்தப்படும், ஆடுபாலம் அருகே தரைப்பாலம் அமைத்து கொடுப்பேன். ஆற்று ஓரங்களில் நவீன கழிப்பிட வசதி செய்து தரப்படும். நவீன மின்சார மயானம் அமைத்து தரப்படும். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் அரசிடம் நிதி உதவி பெற்று நலத்திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்வேன். அனைத்து மக்களக்கும் சமஉரிமை பெற்றுத்தருவதற்காக 24 மணி நேரமும் பாடுபடுவேன்,'என்றார்.


