ADDED : ஜூலை 29, 2011 10:27 AM
சென்னை: இந்து மிஷன் மருத்துவமனை நடத்திய, இலவச கண் பரிசோதனை முகாமில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தாம்பரம் மேற்கில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனை, அனங்காபுதூர் வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. அனங்காபுதூர் ஆர்.எம்.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்த இந்த முகாமில், மொத்தம் 194 பேர் பங்கேற்றனர். இவர்களில், 37 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த 2004 ம் ஆண்டு முதல், இந்து மிஷன் மருத்துவமனை, வாரந்தோறும் இலவச கண் பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறன. இம்மருத்துவமனை சார்பில், இதுவரை 359 இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.


