ADDED : ஜூலை 27, 2011 11:11 PM
விருத்தாசலம் : நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை நாள் விழா நடந்தது.டாக்டர் புலிகேசி தலைமை தாங்கினார்.
டாக்டர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார புள்ளியாளர் பாஸ்கரன் வரவேற்றார்.டாக்டர் மாலதி மக்கள் தொகை நாள் விழா குறித்து பேசினார். மக்கள் தொகை பெருக்கம், திருமண வயது அதிகரித்தல், அனைவருக்கும் கல்வி போன்றவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பொருளாதார பிரச்னைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.