ADDED : அக் 09, 2011 12:30 AM
திருவள்ளூர் : மாவட்டத்தில், ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி, போலீஸ் எஸ்.பி., வனிதா ஆகியோர் பார்வையிட்டனர்.
மாநிலத்தில் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி, திருவள்ளூர் எஸ்.பி., வனிதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஓட்டுப் பெட்டிகள் வைக்கும் அறைகள், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டு எண்ணும் முறை உள்ளிட்டவை குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்தனர். இவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் விசாகன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.


