Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/வீட்டுக்கு வீடு அரசு நல உதவிகள் :அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.ஷா

வீட்டுக்கு வீடு அரசு நல உதவிகள் :அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.ஷா

வீட்டுக்கு வீடு அரசு நல உதவிகள் :அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.ஷா

வீட்டுக்கு வீடு அரசு நல உதவிகள் :அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.ஷா

ADDED : அக் 13, 2011 01:10 AM


Google News
மதுரை : 'முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாக நிறைவேற்ற பாடுபடுவேன்,' என மதுரை மாநகராட்சி 17வது வார்டு (எல்லீஸ்நகர்) அ.தி.மு.க., வேட்பாளர் எம்.எஸ்.ஷா கூறினார்.இவர் கூறியதாவது: திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரித் தாளாளராக உள்ளேன்.

1985லிருந்து அ.தி.மு.க.,வில் ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. கல்வி, கட்சி, தொழில் அனுபவங்களின் மூலம் என்னுடைய வார்டை 'முன்மாதிரி'யாக மாற்றப் பாடுபடுவேன். எல்லீஸ்நகரில் தரமான சாலைகள், மகபூப்பாளையத்தில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான தெருக்கள் அமைய நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் ஜெயலலிதா பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இந்த நலஉதவிகளை என் வார்டு மக்களுக்கு வீடு தோறும் கொண்டு சேர்ப்பேன். எல்லீஸ்நகர் கிருதுமால் நதி வாய்க்கால் தூர்வாரப்படும். நிரந்தர மார்க்கெட் அமைக்க ஏற்பாடுசெய்யப்படும். சொந்தசெலவில் அலுவலகம் அமைத்து, மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பேன். எப்போதும் என்னை மக்கள் தொடர்பு கொள்ளலாம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us