/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வள்ளியூர் யூனியனில் 14 மனுக்கள் தள்ளுபடிவள்ளியூர் யூனியனில் 14 மனுக்கள் தள்ளுபடி
வள்ளியூர் யூனியனில் 14 மனுக்கள் தள்ளுபடி
வள்ளியூர் யூனியனில் 14 மனுக்கள் தள்ளுபடி
வள்ளியூர் யூனியனில் 14 மனுக்கள் தள்ளுபடி
வள்ளியூர் : வள்ளியூர் யூனியனில் 217 உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பதவிக்கு 755 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 பேரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 113 பேரும், கிராம பஞ்., தலைவர் பதவிக்கு 89 பேரும், கிராம பஞ்., வார்டு உறுப்பினர் பதவிக்கு 542 பேரும் ஆக மொத்தம் 755 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கல் மீது கடந்த 30ம் தேதி பரிசீலனை நடந்தது.
அப்போது யூனியன் கவுன்சிலரின் 10வது வார்டில் அருள்மேரி என்பவரது வேட்பு மனுவும், கிராம பஞ்., தலைவர் பதவிக்கு ஆனைகுளம் பஞ்.,சில் ரோசன்சபுரன்பீவி மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கிராம பஞ்., வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த 12 பேரின் மனுக்களும் ஆக மொத்தம் 14 பேரின் வேட்பு மனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது.
கிராம பஞ்., பகுதிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 24 பேர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். நாளை (3ம் தேதி) வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்தகவலை தேர்தல் அலுவலரும், வள்ளியூர் யூனியன் பிடிஓவுமான பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.


