Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அதிக நம்பிக்கை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

அதிக நம்பிக்கை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

அதிக நம்பிக்கை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

அதிக நம்பிக்கை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

ADDED : ஜூலை 27, 2011 03:28 PM


Google News

புதுடில்லி: நேற்று டில்லி வந்தபோது இருந்த நம்பிக்கையை விட தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரபானி கர் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரபானி கர் டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா, மீண்டும் துவக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்தி அளிக்கின்றது. நாங்கள் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி கர், நேற்று டில்லி வந்த போது இருந்த நம்பிக்கையை விட தற்போது அதிகமாக உள்ளது. இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும் என்றார். மேலும் அவர் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடையூறு ஏற்படாமல் நடக்க வேண்டும் என கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us