/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி :தீக்குளிப்பு சம்பவத்தால் போலீஸ் பாதுகாப்புகுறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி :தீக்குளிப்பு சம்பவத்தால் போலீஸ் பாதுகாப்பு
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி :தீக்குளிப்பு சம்பவத்தால் போலீஸ் பாதுகாப்பு
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி :தீக்குளிப்பு சம்பவத்தால் போலீஸ் பாதுகாப்பு
குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி :தீக்குளிப்பு சம்பவத்தால் போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஜூலை 26, 2011 12:05 AM
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்று திறனாளிகள் உட்கார இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாரம் தோறும் பல்வேறு பிரச்னைக்கு தீக்குளிப்பு முயற்சிகள் நடப்பாதல், இதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிராம பகுதி பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் முதல் பல்வேறு பிரச்னைக்கு தீர்வு காண குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் கொடுக்க வருகின்றனர். வாரம் தோறும் பொது மக்களிடம் இருந்து சராசரியாக 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, கலெக்டரின் நேரடி பார்வைக்கு பின் சம்பந்தப்பட்ட துறைக்கு மனுக்கள் பரிசீலனைக்கும், தீர்வுக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால், பெரும்பாலான பொதுமக்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கையை மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர். கடந்த காலங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாத்தில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் நடந்து வந்தது. பூங்காவில் நடக்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் மனு கொடுக்க வருபவர்களை ஒருங்கிணைந்த கூட்டத்தை நடத்த முடியாத நிலை இருந்தது. இதை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள அரங்கில் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வசதிய ஏற்பட்டுள்ளது. மனு கொடுக்க வரும் பொதுமக்கள் முதலில் கீழ் தளத்தில் மனுக்களை பதிவு செய்து கொண்டு மனுக்களுக்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த சீட் பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் கடந்த காலங்களில் மாற்று திறனாளிகளும், முதியவர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை பதிவு செய்யும் நிலையிருந்தது. தற்போது, மாற்று திறனாளிகள் வரிசையில் நிற்காமல் அமர்ந்து மனுக்களை பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதியில் இருந்து வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளில் கூட்டத்தில் நிற்க வேண்டியது தவிர்க்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரு வாரங்களாக பல்வேறு பிரச்னைக்கு தீர்வு காண கோரி பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதை தடுக்கும் வகையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், தேவையில்லாமல் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை கண்காணித்து போலீஸார் தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் மனுக்கள் இலவசமாக எழுதி கொடுக்கும் பகுதியிலும் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து மனுக்களை எழுதி சென்றனர். குறைதீர் கூட்டத்தில் மக்களின் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ப மாற்றம் செய்திருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.