/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வாசித்தல், எழுதுதல் பழக்கத்தை வளர்க்க வேண்டும் நூலக தின விழாவில் கலெக்டர் பேச்சுவாசித்தல், எழுதுதல் பழக்கத்தை வளர்க்க வேண்டும் நூலக தின விழாவில் கலெக்டர் பேச்சு
வாசித்தல், எழுதுதல் பழக்கத்தை வளர்க்க வேண்டும் நூலக தின விழாவில் கலெக்டர் பேச்சு
வாசித்தல், எழுதுதல் பழக்கத்தை வளர்க்க வேண்டும் நூலக தின விழாவில் கலெக்டர் பேச்சு
வாசித்தல், எழுதுதல் பழக்கத்தை வளர்க்க வேண்டும் நூலக தின விழாவில் கலெக்டர் பேச்சு
ADDED : ஆக 12, 2011 11:13 PM
தர்மபுரி: ''வாசித்தல், எழுதுதல் பழக்கத்தை நம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்,'' என கலெக்டர் லில்லி பேசினார்.தர்மபுரி மாவட்ட நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இரண்டாம் ஆண்டு நூலகர் தின விழா நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் (பொ) விஜயலட்சுமி வரவேற்றார். கலெக்டர் லில்லி தலைமை வகித்து பேசியதாவது:ஒவ்வொரு ஊரிலும் கோவில்கள் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக நூலகம் இருக்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக வாசித்தல், எழுதுதல் உள்ளிட்ட பழங்கங்கள் குறைந்து வருகிறது. கம்ப்யூட்டர், 'டிவி' என பல புதியவைகள் வரவால், வாசித்தல் குறைந்து வருகிறது.
பொது மக்கள் அனைவரும் நூலகங்களை பயன்படுத்த வேண்டும். அவசரமான உலகில் நம் குழந்தைகளுக்கு வாசித்தல், எழுதுதல் உள்ளிட்ட பழங்கங்களை நாம் கற்று கொடுக்க வேண்டும். நூலகங்களில் போட்டி தேர்வுக்கு செல்வோருக்கு தேவையான புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும்.அதற்கான நிதியுதவிகள் இல்லை என்றால் நன்கொடைகள் பெற்று பல்வேறு போட்டி தேர்வுக்கான புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட நூலகத்தில் இதற்கான தனி பிரிவு உள்ளது. இதை போட்டி தேர்வு எழுதுவோர் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வாசகர் வட்ட தலைவர் கோவிந்தராஜன் பேசியதாவது:
கல்வி, கேள்வி இருந்தால் மட்டும் தான் முழு மனிதனாக இருக்க முடியும். நூலகங்களில் உள்ள நூல்களை படிப்பதன் மூலம் அறிவு பெருகும், அமைதி ஏற்படும். மனிதன் பிறப்பும் சிறப்பு ஏற்படும். ஒவ்வொருவரிடமும் அமைதி இருந்தலே எளிமை பிறக்கும். போட்டிகள், பொறமைகள் குதைந்து வாழ்வு சிறப்படையும். அறிவு நிறைந்த கல்வியால் மட்டுமே அடக்கம், பொறுமை, பண்பு உள்ளிட்டவைகள் வளரும்.இவ்வாறு அவர் பேசினார்.கவிஞர் தமிழ்தாசன் பேசியதாவது:
நூலங்கள் மட்டுமே நல்ல அறிஞர்களை தர முடியும். பல்வேறு அறிஞர்களும் நூலங்களில் உள்ள புத்தகங்களை படித்து தங்கள் அறிவுத்திறமைகளை வளர்த்து கொண்டனர். வளர்ந்த பெரியர்வகள் அனைவரும் நூலங்களை கோவிலாக நினைத்து பல்வேறு புத்தகங்களை படித்தனர்.புத்தகங்கள் மட்டுமே அமைதியையும், நல்ல பண்புகளை வளர்க்க முடியும். அறிஞர் அண்ணாதுரையை பச்சையப்பன் கல்லூரி பெரிய அறிவாளியாக மாற்றியதா என தெரியாது. சென்னை கன்னிமாரா நூலகம் அண்ணாத்துரையை பெரிய அறிவாளியாக்கி அறிஞர் என்ற பட்டத்தை கொடுத்துள்ளது.புத்தங்கள் படிப்பதன் மூலம் பல்வேறு தகவல்களை பெறுவதோடு , ஒவ்வொருவரும் அறிவாளியாக மாற முடியும். நூலங்களில் சென்று படிப்பதை வளர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் லில்லி வழங்கினார். மாவட்ட மைய நூலகர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


