/உள்ளூர் செய்திகள்/சேலம்/தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிதீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 06, 2011 01:27 AM
ஆத்தூர்: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆத்தூர் தீயணைப்பு நிலைய
வீரர்கள் சார்பில், தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் தீ விபத்து, இயற்கை இடர்பாடுகள் போன்றவை
ஏற்படும்போது, தற்காப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்து
செயல் விளக்கம் செய்து காட்டினர். இதில், ஆத்தூர் தாசில்தார்
லியாகத்அலிகான், மண்டல துணை தாசில்தார் மனோகர், ஆத்தூர் அரசு மருத்துவமனை
அலுவலர் ராஜேந்திரன், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுப்ரமணி,
ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


