Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/"யாரும் குறை காணாத அளவிற்கு பணிபுரியுங்கள்' : தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

"யாரும் குறை காணாத அளவிற்கு பணிபுரியுங்கள்' : தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

"யாரும் குறை காணாத அளவிற்கு பணிபுரியுங்கள்' : தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

"யாரும் குறை காணாத அளவிற்கு பணிபுரியுங்கள்' : தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை

ADDED : அக் 09, 2011 12:24 AM


Google News

காஞ்சிபுரம் : 'தேர்தல் பணியில் ஈடுபடுவோர், நாம் சம்பளம் வாங்குவது, பொது மக்களுக்கு வேலை செய்யத் தான், என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்' என, கலெக்டர் சிவசண் முகராஜா அறிவுரை கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டத்தில், கலெக்டர் சிவசண் முகராஜா தலைமை தாங்கி பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில், நம் செயல்பாடுகள், மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், இருக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு பலர் புகார் செய்கின்றனர். அந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அந்தப் புகார்களுக்கு, சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள்தான் பொறுப்பு.



ஒவ்வொரு அதிகாரியும், தங்கள் பணி என்ன என்பதை புரிந்து, பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து, தேர்தலை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும். நாம் சம்பளம் வாங்குவது, பொது மக்களுக்கு வேலை செய்யத் தான், என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். புகார் கொடுத்தால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என, மக்கள் நினைக்கும் அளவிற்கு, நாம் செயல்பட வேண்டும். யாரும் குறைகாணாத அளவிற்கு பணிபுரிய வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். போலீஸ் எஸ்.பி., மனோகரன் பேசும்போது, ''தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மொபைல் போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 14 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க வேண்டும். தேர்தலுக்கு முதல் நாள் பகல் 12 மணிக்கே, ஓட்டுப் பெட்டிகளையும், ஓட்டுப் பதிவிற்கு பயன்படும் பொருட்களையும், அந்தந்த ஓட்டுச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் அன்று காலையிலே எல்லா ஓட்டுச் சாவடிகளுக்கும் சென்று, அனைத்தும் சரியாக உள்ளதா, எனப் பார்க்க வேண்டும்,'' என்றார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சுதர்சன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us