ADDED : அக் 10, 2011 10:14 PM
ஊட்டி : ஊட்டி நகராட்சியில் போட்டியிடும் காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி., பிரபு பிரசாரம் மேற்கொண்டார்.நீலகிரியில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.
பிரசாரம் நிறைவு பெற இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஊட்டி நகராட்சியில் காங்., சார்பில் தலைவர் பதவிக்கு லலிதா தனபால் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லீலா கோவிந்தராஜன், சீனிவாசன், பர்ஜானா, வினோதா, ரவிகுமார், சையது இமாம், ஜெயகுமார், சாதிக், நாகராஜ், சுதாகர் ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி., பிரபு நேற்று ஊட்டியில் பிரசாரம் செய்தார். சேரிங்கிராஸ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மார்க்கெட், லோயர் பஜார், மெயின் பஜார், காந்தல் ஆகிய பகுதகிளில் பிரசாரம் செய்தார்.


