/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/கல்லங்குறிச்சியில் தே.மு.தி.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்கல்லங்குறிச்சியில் தே.மு.தி.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
கல்லங்குறிச்சியில் தே.மு.தி.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
கல்லங்குறிச்சியில் தே.மு.தி.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
கல்லங்குறிச்சியில் தே.மு.தி.க.,வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
ADDED : அக் 05, 2011 01:32 AM
அரியலூர்: அரியலூர் பஞ்.,யூனியன் ஒன்றிய கவுன்சில் 5வார்டு, கல்லங்குறிச்சி
கவுன்சிலுக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சரஸ்வதி ஜெயவேல்,
அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்தார். பிரசித்தி பெற்ற
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்த
சரஸ்வதி ஜெயவேல், கோயிலின் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி
படையாட்சியாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தொடர்ந்து கல்லங்குறிச்சி,
சீனிவாசபுரம், பள்ளக்காவேரி, தாமரைக்குளம், வெங்கட்டரமணபுரம் உள்ளிட்ட
ஊர்களில், வீதி, வீதியாக சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது மேற்கண்ட பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர்,
சாலை வசதி, வடிகால் வசதி, பஸ் வசதி, தட்டுப்பாடு இல்லாத மின்சாரம்
உள்ளிட்ட வசதிகளை கிடைக்க பாடுபடுவேன் என கூறினார்.
வேட்பாளருடன் தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல், மாவட்ட துணை
செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட கலை, இலக்கிய அணி செயலாளர் தர்மராஜ், மாவட்ட
தொண்டர் அணி செயலாளர் நல்லத்தம்பி, ஒன்றிய செயலாளர் தாமஸ் ஏசுதாஸ்,
உசேனாபாத் கிளை நிர்வாகிகள் ஜெயராமன், ராமலிங்கம், ராஜா, லெட்சுமணன்,
கல்லங்குறிச்சி நடராஜன், தமிழரசன், செல்வராஜ், தாமரைக்குளம் கலையரசன்,
வெங்கட்ட ரமணபுரம் நடராஜன், வடக்கு மாவட்ட கவுன்சில் வேட்பாளர் செல்வராணி
உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.


