பொறுத்திருந்து பார்ப்போம் : பிரசாந்த் பூஷன்
பொறுத்திருந்து பார்ப்போம் : பிரசாந்த் பூஷன்
பொறுத்திருந்து பார்ப்போம் : பிரசாந்த் பூஷன்
ADDED : ஆக 25, 2011 09:59 PM
புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா விவகாரத்தில், அதற்குள் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்று ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்பதாக சொல்லி உள்ளது வரவேற்கத்தக்கது தான் என்றாலும், பார்லிமென்டில் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அவ்வாறு ஒருமித்த கருத்து ஏற்படாவிடில், மேலும் இழுபறி நிலை நீடிக்க வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.ஜன் லோக்பால் மசோதா அமல்படுத்தப்படும் வரை, அன்னா ஹசாரேவின் <உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.