/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அடுத்த மாதம் முதல் பத்திரபதிவு கட்டணம் உயர்கிறதுஹவுசிங்போர்டு பணிகள் மந்தம்அடுத்த மாதம் முதல் பத்திரபதிவு கட்டணம் உயர்கிறதுஹவுசிங்போர்டு பணிகள் மந்தம்
அடுத்த மாதம் முதல் பத்திரபதிவு கட்டணம் உயர்கிறதுஹவுசிங்போர்டு பணிகள் மந்தம்
அடுத்த மாதம் முதல் பத்திரபதிவு கட்டணம் உயர்கிறதுஹவுசிங்போர்டு பணிகள் மந்தம்
அடுத்த மாதம் முதல் பத்திரபதிவு கட்டணம் உயர்கிறதுஹவுசிங்போர்டு பணிகள் மந்தம்
ADDED : ஜூலை 23, 2011 03:21 AM
செய்துங்கநல்லூர்: அடுத்த மாதம் பத்திரபதிவுக் கட்டணம் அதிகரிப்பதால்
தமிழ்நாடு ஹவுசிங் போர்டு அலுவலகம் விரைவாக செயல்பட வேண்டும் என வீட்டு
உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மத்திய, மாநில அரசு ஊழியர்கள்,
பொதுமக்கள், தாயகம் திரும்பியோர், உடல் ஊனமுற்றோர் என பல்வேறு
தரப்பினருக்கு தமிழ்நாடு ஹவுசிங் போர்டு நிலம் வாங்கி வீடு கட்டிக்
கொடுத்து அதற்குரிய தொகையினை தவணை முறையில் திரும்ப பெற்றுக்
கொண்டிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கான இந்த
அலுவலகம் பாளை.,யில் உள்ளது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி,
நாகர்கோவில் உட்பட பல நகரங்களில் இந்த அலுவலகம் மூலம் வீடுகள் கட்டிக்
கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1996 ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த
வீடுகளின் உரிமையாளர்களுக்கு பத்திரம் வழங்க அண்மையில் தமிழக அரசு ஒரு
சலுகை உத்திரவை போட்டது. கடந்த ஜூன் 13ம் தேதிக்குள் பாக்கி தொகையை
செலுத்துவோருக்கு சில வட்டிச் சலுகைகளை அளித்தது. அதற்காக அன்று இரவு
சுமார் 10 மணி வரை இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள்
பாக்கித் தொகையினை செலுத்தியுள்ளனர்.
தற்போது அவர்களுக்கு இந்த அலுவலகம் பத்திரம் தயாரித்து வழங்க வேண்டும்.
இப்போது அரசு அடுத்த மாதம் முதல் பத்திரப் பதிவு கட்டணத்தை
உயர்த்தியுள்ளது. அதற்குள் பத்திரம் முடிக்க வேண்டும் என ஒதுக்கீட்டாளர்கள்
அலுவலகம் சென்று வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் ஒரே ஒரு அலுவலர் தான்
இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார். ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து
லட்சக்கணக்கில் பணம் பெறும் போது இரண்டு, மூன்று பணியாளர்களை பணியில்
அமர்த்தி வசூல் செய்த அலுவலகம் ஒதுக்கீட்டாளர்களுக்கு பத்திரம் வழங்குவதில்
இழுத்தடிப்பு செய்கிறது. ஒதுக்கீட்டாளர்களின் பைல்களை காணவில்லை என்று
அலையவைப்பது. அது சரியில்லை, இது சரியில்லை என்று ஒருவரை பலநாட்களாக அலைய
வைக்கின்றனர். அலுவலகத்தில் வேலை செய்வோர் எத்தனை நாட்கள் தான் லீவு
எடுப்பது என்று சலித்து கொள்ளும் அளவுக்கு அந்த அலுவலகம் அலைக்கழிப்பு
செய்கிறது என்று ஒதுக்கீட்டாளர்கள் கூறுகின்றனர்.எனவே மூன்று மாவட்ட
கலெக்டர்களும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து அதிகமாக லஞ்சம்
எதிர்பார்க்காமல் கூடுதல் பணியாளர்களை வேலையில் அமர்த்தி இம்மாதத்திற்குள்
அனைவருக்கும் பத்திரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
ஒதுக்கீட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


