Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பாக்.,ல் கவர்னரைக் கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை

பாக்.,ல் கவர்னரைக் கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை

பாக்.,ல் கவர்னரைக் கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை

பாக்.,ல் கவர்னரைக் கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை

ADDED : அக் 01, 2011 11:38 PM


Google News
Latest Tamil News
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் டசீரைக் கொலை செய்த, அவரது பாதுகாவலர் மாலிக் மும்தாஜ் உசேன் கத்ரிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து, அந்நாட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாக்., பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் டசீர், மதத் துவேஷ சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி வந்தார். அதோடு, மதத்துவேஷ சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பெண்ணுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். இதனால் அவர் மீது கோபம் கொண்ட, அவரது மெய்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் கத்ரி, கடந்த ஜனவரி 4ம் தேதி, இஸ்லாமாபாத்தில் வைத்து சுட்டுக் கொன்றார். விசாரணையில் கத்ரி, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அவருக்கு ஆதரவாக வாதாட எந்த வக்கீலும் முன்வரவில்லை. எனினும், மதத்துவேஷ சட்ட ஆதரவாளர்கள், கத்ரியை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர்.

விசாரணை முடிந்த நிலையில், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புக் கோர்ட்டின் தற்காலிக அலுவலகத்தில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி பர்வேஸ் அலி ஷா, கத்ரி மீதான இரு குற்றச்சாட்டுகளுக்கு, இரட்டை மரண தண்டனைகள் விதித்தார். தீர்ப்பளிக்கப்படுவதை ஒட்டி நேற்று ராவல்பிண்டி நகரில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us