/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உளுந்தூர்பேட்டையில் வி.சி.,- பா.ம.க., தயக்கம்உளுந்தூர்பேட்டையில் வி.சி.,- பா.ம.க., தயக்கம்
உளுந்தூர்பேட்டையில் வி.சி.,- பா.ம.க., தயக்கம்
உளுந்தூர்பேட்டையில் வி.சி.,- பா.ம.க., தயக்கம்
உளுந்தூர்பேட்டையில் வி.சி.,- பா.ம.க., தயக்கம்
ADDED : அக் 06, 2011 01:02 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் வி.சி., கட்சி வேட்பாளர்கள் யாரும் போட்டியில்லை.
பா.ம.க., ஒரு வார்டில் மட்டும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு 11 பேர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு 80 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் தி.மு.க., சார்பில் 2, 8, 12, 15, 17, 18 வார்டுகளுக்கும், அ.தி.மு.க., சார்பில் 1, 9, 10,12 வார்டுகளுக்கும் வேட்பாளரை நிறுத்தவில்லை. பா.ம.க., சார்பில் 17 வது வார்டில் தேவி என்பவர் போட்டியிடுகிறார். ம.தி.மு.க.,வில் 3, 9 வது வார்டு, தே.மு.தி.க.,வில் 1,4, 6, 7, 9, 10, 11, 14, 16 வார்டுகளில் மட்டுமே போட்டியிடுகின்றனர். வி.சி., கட்சி சார்பில் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி வேட்பாளர் நிறுத்தப்பட்டார். வரும் உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் வி.சி., கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


