Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆபாச பேச்சுடிரைவர் கைது

ஆபாச பேச்சுடிரைவர் கைது

ஆபாச பேச்சுடிரைவர் கைது

ஆபாச பேச்சுடிரைவர் கைது

ADDED : அக் 07, 2011 01:26 AM


Google News
ப.வேலூர்: திருமணமான இளம்பெண்ணிடம், மொபைல் ஃபோனில் ஆபாசமாக பேசிய லாரி டிரைவரை, ஜேடர்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.

ப.வேலூர் அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி தீபா (22). அவரது வீட்டின் எதிரே லாரி டிரைவர் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். தீபாவின் மொபைல் ஃபோன் எண்ணை கண்டறிந்த லாரி டிரைவர் ரஞ்சித், நாள்தோறும் அவருக்கு ஃபோன் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளார்.அதுகுறித்து தீபாவின் கணவர் விஜயகுமார், ஜேடர்பாளையம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் லாரி டிரைவர் ரஞ்சித்தை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us