ADDED : அக் 08, 2011 10:50 PM
பழநி : பழநி பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில் லாட்ஜ் அருகே தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு குடிசையில் உருவான தீ, பக்கத்து குடிசைகளுக்கும் பரவியது. இதில் சுப்பிரமணி, முத்துச்சாமி, பகவதி ஆகியோரின் குடிசைகள் சாம்பலாயின. நகை உட்பட எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


