/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/24 மணி நேர சேவை மையம் : தி.மு.க., வேட்பாளர் ஆனந்த்24 மணி நேர சேவை மையம் : தி.மு.க., வேட்பாளர் ஆனந்த்
24 மணி நேர சேவை மையம் : தி.மு.க., வேட்பாளர் ஆனந்த்
24 மணி நேர சேவை மையம் : தி.மு.க., வேட்பாளர் ஆனந்த்
24 மணி நேர சேவை மையம் : தி.மு.க., வேட்பாளர் ஆனந்த்
ADDED : அக் 08, 2011 11:14 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆனந்த் நேற்று நேரு பஜார், ஆஷா தெரு, தெற்குரதவீதி மதுரை முக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு கேட்டார்.
அவர் கூறியதாவது: நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடத்துவேன். பொதுமக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டு நகாராட்சி நிர்வாகம் செயல்படும். மக்களின் குறைகளை தீர்க்க 24 மணி நேர சேவை மையம் துவங்கப்பட்டு, இந்த மையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் 24 மணி நேரத்தில் தீர்த்து வைக்கப்படும்.
தமிழகத்தில் கடந்த பொதுத்தேர்தல் நடந்த போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருந்த போதும், கமிஷனின் அனுமதி பெற்று அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர் பெறுவோர் ஆகியோர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தி.மு.க., அரசு வழங்கியது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தும் புதிய ஊதியமோ, அகவிலைப்படியோ உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தி.மு.க., அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதனை அரசு ஊழியர்கள் மறவாமல் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பெண்கள் சுயமாக தொழில் செய்யும் வகையில், வேலைவாய்ப்பு பயிற்சி, இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி வழங்கப்படும். என்றார்.


