/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அமைச்சர் பேச்சில் சர்ச்சை விசாரிக்க கலெக்டர் உத்தரவுஅமைச்சர் பேச்சில் சர்ச்சை விசாரிக்க கலெக்டர் உத்தரவு
அமைச்சர் பேச்சில் சர்ச்சை விசாரிக்க கலெக்டர் உத்தரவு
அமைச்சர் பேச்சில் சர்ச்சை விசாரிக்க கலெக்டர் உத்தரவு
அமைச்சர் பேச்சில் சர்ச்சை விசாரிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 11, 2011 02:39 AM
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த விழாவில், சர்சையை ஏற்படுத்தும் விதத்தில் அமைச்சர் பேசினாரா? என்று விசாரணை மேற்கொள்ளும்படி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.குமாரபாளையம் நகராட்சி, 7வது வார்டில் அ.தி.மு.க., தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது.
அந்த விழாவில் பங்கேற்ற வருவாய்துறை அமைச்சர் தங்கமணி, அ.தி.மு.க, வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் நபர்களுக்கு, அரசின் திட்டங்கள் எளிதில் கிடைக்கும். மற்ற நபர்களுக்கு அரசு திட்டம் கிடைப்பதில் தாமதமாகும் என பேசியதாக, தே.மு.தி.க., திருச்செங்கோடு எம்.எல்.ஏ., சம்பத்குமார், கலெக்டர் குமரகுருபரனிடம் புகார் மனு அளித்தார்.அமைச்சர் தங்கமணி, அவ்வாறு பேசினாரா? என விசாரணை மேற்கொள்ளும்படி நகராட்சி தேர்தல் அலுவலரான சந்திரசேகரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.


