/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அனைத்து கட்சி வேட்பாளர் ஒரே மேடையில் பிரச்சாரம்அனைத்து கட்சி வேட்பாளர் ஒரே மேடையில் பிரச்சாரம்
அனைத்து கட்சி வேட்பாளர் ஒரே மேடையில் பிரச்சாரம்
அனைத்து கட்சி வேட்பாளர் ஒரே மேடையில் பிரச்சாரம்
அனைத்து கட்சி வேட்பாளர் ஒரே மேடையில் பிரச்சாரம்
ADDED : அக் 14, 2011 01:29 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி சேர்மன், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்கள், ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ராசிபுரம் நகராட்சி சேர்மன் பதவிக்கு, அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ., உட்பட,13 பேர் போட்டியிடுகின்றனர். வார்டு கவுன்சிலர் பதவிக்கு, 168 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், சேர்மன் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு, ராசிபுரம் நகைத் தொழிலாளர்கள் சங்கம், விஸ்வகர்மா சமூக சங்கம், ஷார்ப் வர்த்தகர்கள் சங்கம் போன்றவை சங்க கட்டிடத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற வேட்பாளர்களை, நகைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்து பேசினார். பின், ஒவ்வொரு வேட்பாளராக வந்து தங்களது வாக்குறுதிகளை அளித்தனர். அதுபோல், கவுன்சிலர் வேட்பாளர்களும் தங்களை ஆதரித்தும், வாக்குறுதிகளையும் விளக்கிக் கூறினர். ஒரே மேடையில் அனைத்துக் கட்சி சேர்மன், கவுன்சிலர் வேட்பாளர்கள் தோன்றி பிரச்சாரம் செய்தது, வியப்பை ஏற்படுத்தியது.


