ADDED : ஜூலை 23, 2011 04:04 PM
புதுடில்லி : வரும் திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா வங்கதேசம் செல்கிறார்.
கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தான் பிடியிலிருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. இதனையடுத்து வங்கதேசம் விடுதலை பெற்றதன் 40வருட கொண்டாட்டங்களின் போது காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியாவுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக அந்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த விருதை பெறுவதற்காக வரும் திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா வங்கதேசம் செல்லவுள்ளார்.


