ADDED : செப் 21, 2011 11:34 PM
புதுச்சேரி: அரியாங்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் திருமண நிலையத்தில்
சுகாதார துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி
நடந்தது.
தலைமை மருத்துவர் புவனரட்சகன் தலைமை தாங்கினார். கிராமப்புற சுகாதார
இயக்குனர் விஜயா பாலகந்தன், துணை இயக்குனர் ராவ் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் சசிக்கலாதேவி சிறப்புரையாற்றி பேறுகால பராமரிப்பு பற்றி ஆலோசனை
வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெண் சுகாதார மேற்பார்வையாளர்
கல்யாணி, மகப்பேறு உதவியாளர்கள் செய்திருந்தனர்.


