/உள்ளூர் செய்திகள்/தேனி/அதிக குழந்தைகளை ஏற்றினால் ஆட்டோ பறிமுதல் செய்ய முடிவுஅதிக குழந்தைகளை ஏற்றினால் ஆட்டோ பறிமுதல் செய்ய முடிவு
அதிக குழந்தைகளை ஏற்றினால் ஆட்டோ பறிமுதல் செய்ய முடிவு
அதிக குழந்தைகளை ஏற்றினால் ஆட்டோ பறிமுதல் செய்ய முடிவு
அதிக குழந்தைகளை ஏற்றினால் ஆட்டோ பறிமுதல் செய்ய முடிவு
ADDED : செப் 09, 2011 11:27 PM
தேனி : அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
தேனி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனியில் இயக்கப்படும் அபே ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாடாமேஜிக் வாகனங்களில் அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வருவது தொடர்கிறது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே எட்டு குழந்தைகளுக்கு மேல் பள்ளி குழந்தைகளை ஏற்றும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்.பெற்றோர்கள் குறைந்த வாடகைக்கு ஆசைப்பட்டு ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர்.


