Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/அண்ணாதுரை பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை

அண்ணாதுரை பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை

அண்ணாதுரை பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை

அண்ணாதுரை பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மரியாதை

ADDED : செப் 16, 2011 12:26 AM


Google News

திருச்சி: திருச்சியில் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினரும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி ஆண்டுதோறும் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றும் அண்ணாதுரையின் பிறந்தநாள் மாநிலம் முழுவதும் அனைத்து கட்சியினராலும் கொண்டாடப்பட்டது. திருச்சியில் சத்திரம் பஸ்ஸ்டாண்டில் உள்ள அவரது சிலைக்கு பல கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* திருச்சி மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கராஜா, அம்பிகாபதி, முன்னாள் எம்.எல்.ஏ., சேகரன் ஆகியோர் தலைமையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாயவன், கோட்டத்தலைவர் குமரேசன், பகுதி செயலாளர் செவந்திலிங்கம், கவுன்சிலர் லீலாவதி, நிர்வாகி விஜயா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

* அ.தி.மு.க., சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், மாநகர இளைஞரணி செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

* தே.மு.தி.க., சார்பில் மாநகர் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் விஜயராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தே.மு.தி.க., மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் விஜயகுமார், அவைத்தலைவர் அலங்கராஜ், கவுன்சிலர் ஜோசப் ஜெரால்டு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதுதவிர பல்வேறு கட்சியினரும், அமைப்பைச் சேர்ந்தவர்களும் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us