/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூரில் மின் திருட்டு அதிகரிப்பு ரூ.2.64 லட்சம் அபராதம் வசூலிப்புமேட்டூரில் மின் திருட்டு அதிகரிப்பு ரூ.2.64 லட்சம் அபராதம் வசூலிப்பு
மேட்டூரில் மின் திருட்டு அதிகரிப்பு ரூ.2.64 லட்சம் அபராதம் வசூலிப்பு
மேட்டூரில் மின் திருட்டு அதிகரிப்பு ரூ.2.64 லட்சம் அபராதம் வசூலிப்பு
மேட்டூரில் மின் திருட்டு அதிகரிப்பு ரூ.2.64 லட்சம் அபராதம் வசூலிப்பு
ADDED : ஆக 01, 2011 04:11 AM
மேட்டூர்: மேட்டூர் பகுதியில் மின்திருட்டு அதிக அளவில் நடக்கிறது.
கடந்த
மாதத்தில் மட்டும், 19 மின் திருட்டு கண்டு பிடிக்கப்பட்டு ரூ.2.64 லட்சம்
வசூலிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் மேட்டூர், ஓமலூர்,
சங்ககிரி ஆகிய மூன்று கோட்டங்கள் உள்ளது. இதில், மேட்டூர் கோட்டத்தில்
அதிக அளவில் மின் திருட்டு நடப்பதால் மின்சார கழகத்துக்கு நஷ்டம்
ஏற்படுகிறது.மேட்டூர் கோட்டத்தில் நடக்கும் மின்திருட்டு குறித்து மின்
கழகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றது. அதனை தொடர்ந்து செயற்பொறியாளர்
(பொது) தங்கவேல், சந்திரசேகரன் (இயக்கம், பராமரிப்பு) தலைமையில் உதவி,
இளநிலை பொறியாளர்கள் கடந்த 23ம் தேதி மேட்டூர் கோட்டத்துக்கு உள்பட்ட
கொளத்தூர் தெற்கு, வடக்கு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 759
மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது இதில், 19 மின் இணைப்புகளில் மின்
திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்புக்காக
சம்பந்தபட்ட நுகர்வோர்களிடம் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரத்து 253 ரூபாய்
அபராதம் வசூலிக்கப்பட்டது.