/உள்ளூர் செய்திகள்/சேலம்/தந்தையிடம் அபகரித்த நிலத்தை மீட்க வாரிசுகள் எஸ்.பி.,யிடம் மனுதந்தையிடம் அபகரித்த நிலத்தை மீட்க வாரிசுகள் எஸ்.பி.,யிடம் மனு
தந்தையிடம் அபகரித்த நிலத்தை மீட்க வாரிசுகள் எஸ்.பி.,யிடம் மனு
தந்தையிடம் அபகரித்த நிலத்தை மீட்க வாரிசுகள் எஸ்.பி.,யிடம் மனு
தந்தையிடம் அபகரித்த நிலத்தை மீட்க வாரிசுகள் எஸ்.பி.,யிடம் மனு
ADDED : ஆக 01, 2011 04:06 AM
ஆட்டையாம்பட்டி: சேலம் ஜங்சன், முல்லைநகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, லதா,
சரவணன், அரசு டாக்டர் ராஜகுமார் ஆகிய நால்வரும் கொடுத்துள்ள புகார் மனு
விவரம்:சேலம், ஆட்டையாம்பட்டி கிராமம், காளிப்பட்டி செல்லும் வழியில்
எங்களுக்கு சொந்தமான, 1.69 ஏக்கர் நிலம் இருந்தது.
எங்களுடைய தந்தை ஏழுமலை,
கடந்த 1988ல், எஸ்.பாப்பாரப்பட்டி, சோலைகவுண்டன்காடு கிராமத்தை சேர்ந்த
ஆறுமுகம் என்பவரிடம், 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.இந்த
கடனுக்காக, அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் தந்தையிடம், 1.69 ஏக்கர் நிலத்தை
மிரட்டி வாங்கி கொண்ட ஆறுமுகம், பணத்தை கொடுத்து விட்டு, நிலத்தை பெற்று
கொள்ளும்படி தெரிவித்துள்ளார். அப்போது, மைனராக இருந்த நாங்கள் நால்வரும்
படித்து கொண்டிருந்தோம். அதனால், இந்த நில விவகாரம், எங்கள் கவனத்துக்கு
வரவில்லை.கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 26ல், எங்களுடைய நிலத்தை,
ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சக்திவேல் மனைவி விஜயா, ராசிபுரத்தை சேர்ந்த
கணேசன், வேலு ஆகிய மூவருக்கும் விற்பனை செய்ய முடிவு செய்தோம். அவர்களுடைய
பெயருக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுக்க, ஜூலை 2ல், மல்லசமுத்திரம்
சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற போது, போலியான ஆவணங்களை தயார் செய்து,
எங்களுடைய நிலத்தை ஆறுமுகம், சேலம் ரத்தினசாமிபுரத்தை சேர்ந்த
செந்தில்குமார் என்பவருக்கு விற்பனை செய்துள்ளது தெரிந்தது.கடனாக வாங்கிய
பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக தெரிவித்தும், ஆறுமுகம் நிலத்தை தர
மறுத்ததோடு, செந்தில்குமார், அவரது தந்தை தனபால் ஆகிய மூவரும் மிரட்டி
வருகின்றனர். அந்த நிலத்துக்கு இதுவரை நாங்கள்தான் வரி செலுத்தி வருகிறோம்.
எனவே, எங்களது நிலத்தை மீட்டுதர வேண்டும்.இவ்வாறு மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.