/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஊழலற்ற நகராட்சி ஆக்குவேன் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதிஊழலற்ற நகராட்சி ஆக்குவேன் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ஊழலற்ற நகராட்சி ஆக்குவேன் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ஊழலற்ற நகராட்சி ஆக்குவேன் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ஊழலற்ற நகராட்சி ஆக்குவேன் அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : செப் 28, 2011 11:48 PM
மன்னார்குடி: மன்னார்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வக்கீல் சுதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பாடுபடுவேன். ஊழலற்ற நகராட்சி ஆக்குவேன். சட்டிலுட்டி வாய்க்கால் சீரமைக்கப்படும். வடிகால் பகுதிகள், குளங்கள் சீரமைக்கப்படும். ஹரித்திரா நதி தெப்பக்குளத்தில் சுற்றுலா வசதி, படகு சவாரி ஏற்படுத்தப்படும். நீண்ட நாள் கோரிக்கையான எரிவாயு தகன மேடை ஏற்படுத்தப்படும். நகரை அழகை படுத்தும் வகையில் நகரின் மையப்பகுதியில் நீச்சல்குளம் அமைக்கப்படும். ஒரு கோடி ரூபாயில் நூலகம் கட்டப்படும். பிறப்பு இறப்பு சான்று 24 மணி நேரத்தில் வழங்கப்படும். கோரிக்கைகளை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்.மன்னார்குடி நகராட்சியை முதன்மை நகராட்சியாக்க பாடுபடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவாராஜமாணிக்கம் மற்றும் அ.தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.


