/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாரதியார் பல்கலை செஸ் : பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்பாரதியார் பல்கலை செஸ் : பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
பாரதியார் பல்கலை செஸ் : பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
பாரதியார் பல்கலை செஸ் : பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
பாரதியார் பல்கலை செஸ் : பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
ADDED : ஜூலை 28, 2011 01:01 AM
கோவை : பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரிகளுக்கான செஸ் போட்டியில் பி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. மாணவ, மாணவியர் அகிலஇந்திய பல்கலை விதிப்படி ஒன்று சேர்ந்து விளையாடினர்.கல்லூரி குழுப்போட்டியில் ஏழு சுற்றுகள் நடந்ததில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 36 கல்லூரி அணிகள் பங்கேற்றன. புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற கல்லூரிகள் விவரம்:பி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லூரி 19 புள்ளிகளுடன் முதலிடமும், சி.எம்.எஸ்.,கலை அறிவியல் கல்லூரி 18.5 புள்ளிகளுடன் இரண்டாமிடமும் பெற்றன.ஈரோடு கொங்கு கல்லூரி, வாசவி கல்லூரி, பொள்ளாச்சி என்.ஜி.எம்.,கல்லூரி, கே.ஜி.,கல்லூரி முறையே மூன்று முதல் ஆறு இடங்களை பெற்றன.பாரதியார் பல்கலை, உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி, ஈரோடு கலை கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி முறையே ஏழு முதல் 11 இடங்களை பெற்றன.
சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி.,கல்லூரியில் சரவணன், முத்து பழனியப்பன், பிரசாத், கிருஷ்ணகுமார், ஜெயராம், கிருஷ்ணன் ஆகியோரும், இரண்டாமிடம் பெற்ற சி.எம்.எஸ்.,கல்லூரியில் ஆசிஸ்குமார், அமர்ஜித் சுரேஷ், வினோத், நவன்ஜான், வினோத், பவாஸ் ஆகியோரும் விளையாடினர்.இன்றும் நாளையும் தனிநபர் சாம்பியன் போட்டி ஒன்பது சுற்றுகளாக நடக்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் முதல் ஆறு வீரர்களுக்கு பாரதியார் பல்கலை சார்பில் 'டிராக் சூட்' மற்றும் சான்றிதழ் பரிசாகவும் வழங்கப்படுகிறது. வெற்றி பெறும் வீரர்கள் அகிலஇந்திய பல்கலை செஸ் போட்டியில் பங்கேற்க அழைத்து செல்லப்படுவார்கள். செலவுகள் அனைத்தும் பல்கலையை சேர்ந்ததாகும்.


