/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் அதிரடி கைதுகல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் அதிரடி கைது
கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் அதிரடி கைது
கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் அதிரடி கைது
கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் அதிரடி கைது
ADDED : செப் 20, 2011 01:12 AM
நாமக்கல்: நாமக்கல் அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் வினோத் (19). அவரும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுபஸ்ரீ (17) என்ற பெண்ணும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு, இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி கல்லூரி சென்ற சுபஸ்ரீ வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், தனது மகள் சுபஸ்ரீயை வினோத் கடத்தி சென்றிருக்க கூடும் என, அவரது தந்தை மாயவன் சந்தேகித்தார். அதுதொடர்பாக, நல்லிபாளையம் போலீஸில் மாயவன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே வினோத்தை கைது செய்தனர். மேலும், மாணவி சுபஸ்ரீயையும் மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


