Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி-கேரளா வழித்தடத்தில் பஸ் இயக்கவில்லை: கேரளா பந்த் எதிரொலி

பொள்ளாச்சி-கேரளா வழித்தடத்தில் பஸ் இயக்கவில்லை: கேரளா பந்த் எதிரொலி

பொள்ளாச்சி-கேரளா வழித்தடத்தில் பஸ் இயக்கவில்லை: கேரளா பந்த் எதிரொலி

பொள்ளாச்சி-கேரளா வழித்தடத்தில் பஸ் இயக்கவில்லை: கேரளா பந்த் எதிரொலி

ADDED : செப் 20, 2011 01:10 AM


Google News
பொள்ளாச்சி : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் நேற்று நடந்த 'பந்த்' காரணமாக, பொள்ளாச்சி - கேரளா வழித்தடத்தில் பஸ் இயக்கவில்லை. லோடு ஏற்றிய சரக்கு லாரிகளும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டன.

மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3.14 ரூபாய் உயர்த்தி அமல்படுத்தியது. கேரளாவில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நேற்று அனைத்து கட்சிகள் சார்பில் 'பந்த்' நடந்தது. 'பந்த்'திற்கு ஆதரவு தெரிவித்து, கேரளாவில் வியாபாரிகளும் கடையடைப்பு செய்தனர். இதனால், பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு நேற்று காய்கறி உள்ளிட்ட சரக்குகள் கொண்டு செல்லவில்லை. 'லோடு' ஏற்பட்ட சரக்கு லாரிகளும், தமிழக - கேரள எல்லை பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. இருப்பினும், ஒரு சில கேரள வியாபாரிகள் சந்தைக்கு வந்து காய்கறிகளை ஏலம் எடுத்தனர். காய்கறி வியாபாரிகள் கூறுகையில், 'கேரளாவில் 'பந்த்' என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால், முன்தினம் இரவு சரக்கு முழுவதும் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இன்று (நேற்று) அனுப்ப வேண்டிய சரக்குகள், வழக்கம் போல் லாரியில் ஏற்றப்பட்டு, தமிழக - கேரள எல்லையில் நிறுத்தப்பட்டது. மாலை 6.00 மணிக்கு 'பந்த்' முடிந்தவுடன் சரக்கு ஏற்றிய லாரிகள் கேரள எல்லைக்குள் செல்லும். 'பந்த்'தினால், எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை,' என்றனர். அதேபோல், பொள்ளாச்சி - பாலக்காடு, திருச்சூர் வழித்தடத்தில் பஸ்களும் இயக்கப்படவில்லை. பொள்ளாச்சியிலிருந்து கேரளப்பகுதிகளுக்கு தினமும் ஐந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று 'பந்த்' காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால், கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பந்த்' காரணமாக பயணிகள் வருகையில்லாததால், பஸ்கள் இயக்கப்படவில்லை. மாலை 6.00 மணி முதல் மீண்டும் பஸ் இயக்கப்பட்டது. இதனால், பாதிப்பு ஏதும் இல்லை' என்றனர். உடுமலை: கேரளாவில் நடந்த பந்த் காரணமாக உடுமலையிலிருந்து மூணாறுக்கு நேற்று மாலை வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. மறையூர், காந்தலூர், கோவில் கடவு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us