/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போலீசாரின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கைபோலீசாரின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
போலீசாரின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
போலீசாரின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
போலீசாரின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை
ADDED : ஆக 09, 2011 02:44 AM
விழுப்புரம் : போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் சிறப்பு கூட்டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் இன்பசேகரன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் முனுசாமி வரவேற்றார்.போலீஸ் துறையில் பணி புரிபவர்கள், ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். போலீசாரை மிரட்டி பொய் புகார்களை கொடுக்கும் போலி மனித உரிமை அமைப்புகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாருக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் கோபாகிருஷ்ணன், மூர்த்தி, கிருபானந்தம், சின்னதம்பி, கிருஷ்ணமூர்த்தி, முகமது கவுஸ், லோகநாதன்,வேலாயுதம் கலந்து கொண்டனர்.


