தி.மு.க., உறுப்பினர் மொபைல் போன் பறிமுதல்
தி.மு.க., உறுப்பினர் மொபைல் போன் பறிமுதல்
தி.மு.க., உறுப்பினர் மொபைல் போன் பறிமுதல்
UPDATED : செப் 05, 2011 07:13 PM
ADDED : செப் 05, 2011 07:03 PM
சென்னை: சட்டசபையில், அ.தி.மு.க., - தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் கடும் கூச்சல், குழப்பம் நிலவிக் கொண்டிருந்த போது, பின்வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி தி.மு.க., உறுப்பினருமான ராஜா, தன் மொபைல் போனை இயக்கிக் கொண்டிருந்தார்.சபை நடவடிக்கை ஆரம்பித்த பின், மொபைல் போனை உறுப்பினர்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது, சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும் என, சபாநாயகர் ஜெயகுமார், ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ராஜாவின் மொபைல்போனை பறிமுதல் செய்யும்படி சபை காவலர்களுக்கு ஜெயகுமார் உத்தரவிட்டார்.இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் மற்றும் மார்ஷல்கள், சபைக்குள் விரைந்து சென்று, ராஜாவின் கையில் இருந்த மொபைல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சபாநாயகர் ஜெயகுமார், ''மொபைல் போன் விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன்,'' என்றார்.


