/உள்ளூர் செய்திகள்/தேனி/ஊராட்சி தலைவர் பதவி யாருக்கு ? : அ.தி.மு.க.,வினர் குரல் வாக்கெடுப்புஊராட்சி தலைவர் பதவி யாருக்கு ? : அ.தி.மு.க.,வினர் குரல் வாக்கெடுப்பு
ஊராட்சி தலைவர் பதவி யாருக்கு ? : அ.தி.மு.க.,வினர் குரல் வாக்கெடுப்பு
ஊராட்சி தலைவர் பதவி யாருக்கு ? : அ.தி.மு.க.,வினர் குரல் வாக்கெடுப்பு
ஊராட்சி தலைவர் பதவி யாருக்கு ? : அ.தி.மு.க.,வினர் குரல் வாக்கெடுப்பு
ADDED : அக் 03, 2011 11:01 PM
கம்பம் : சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதில் கட்சியின் கிளை செயலாளருக்கும், தற்போதைய ஊராட்சி தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியை சமாளிக்க முடியாமல், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் தற்போதைய தலைவர் முருகேசன், அ.தி.மு.க., கிளை செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட 4 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் கட்சி தலைமை தற்போதைய தலைவர் முருகேசனுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் கிளை செயலாளர் செல்வக்குமார் அதை ஏற்கவில்லை. இதுகுறித்து விவாதிக்க சுருளிப்பட்டியில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. 88 பேர் பங்கேற்றனர். முதலில் குலுக்கல் போடலாம் என்றனர். அதற்கு செல்வக்குமார் மறுத்து விட்டார். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் தற்போதைய தலைவர் முருகேசன் 52 ஓட்டுகளையும், செல்வக்குமார் 36 ஓட்டுகளையும் பெற்றனர். எனவே ஊராட்சி தலைவர் பதவியில் இருந்து செல்வக்குமார் விலக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கும் அவர் மறுத்து விட்டார்.


