/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பழங்கால சீன மருத்துவத்தில் செம்பு, தங்கம், வெள்ளி பயன்பாடுபழங்கால சீன மருத்துவத்தில் செம்பு, தங்கம், வெள்ளி பயன்பாடு
பழங்கால சீன மருத்துவத்தில் செம்பு, தங்கம், வெள்ளி பயன்பாடு
பழங்கால சீன மருத்துவத்தில் செம்பு, தங்கம், வெள்ளி பயன்பாடு
பழங்கால சீன மருத்துவத்தில் செம்பு, தங்கம், வெள்ளி பயன்பாடு
ADDED : செப் 30, 2011 01:22 AM
சிவகாசி : சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 2புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் அதில் வேதியியல் மாணவர்களின் பங்கு' பற்றிய கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் கண்மணி தலைமை வகித்தார். மாணவர் சுடலையாண்டி வரவேற்றார். விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி பேராசிரியர் ராமன் பேசுகையில், ''சீனர்களும், எகிப்தியர்களும் தமது பழங்கால மருத்துவத்தில் செம்பு, தங்கம், வெள்ளி, பாதரச சேர்மங்களை பயன்படுத்தி நோய்களை குணமடைய செய்தனர். தற்போது அனைவு சேர்மங்களின் பங்கு மருத்துவ துறையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிஸ் பினாடின் என்ற சேர்மம் புற்றுநோய் எதிர்ப்பாகவும், ஆண்டி மைக்ரோப்பாகவும் பயன்படுகிறது. சிஸ் பிளாட்டின், பாதிக்கப்பட்ட டி.என்.ஏ.,வை சரி செய்யவும், நீக்கவும் பயன்படுகிறது. கார்போ பிளாட்டின் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுகிறது. அரோநோபின் என்ற அனைவு சேர்மம் தீராத மூட்டுவலி சிகிச்சைக்கு பயன்படுகிறது. நமது உடலில் செம்பு, துத்தநாகம், காரீயம் ஆகியவற்றின் உலோக நச்சு தன்மையை போக்க எத்திலீன்- டை- அம்மீன் டெட்ரோ அசிட்டிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது,'' என்றார். மாணவி மாரிச்செல்வி நன்றி கூறினார்.