/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செஞ்சிலுவை தலைவருக்குநெல்லையில் வரவேற்புசெஞ்சிலுவை தலைவருக்குநெல்லையில் வரவேற்பு
செஞ்சிலுவை தலைவருக்குநெல்லையில் வரவேற்பு
செஞ்சிலுவை தலைவருக்குநெல்லையில் வரவேற்பு
செஞ்சிலுவை தலைவருக்குநெல்லையில் வரவேற்பு
ADDED : ஜூலை 23, 2011 02:43 AM
திருநெல்வேலி:நெல்லையில் செஞ்சிலுவைச்சங்க மாநிலத்தலைவருக்கு வரவேற்பு
அளிக்கப்பட்டது.செஞ்சிலுவை சங்க மாநிலத்தலைவர் ஹரீஷ் மேத்தா குற்றாலத்தில்
நடக்கும் மாநில செஞ்சிலுவைச்சங்க செயலாளர்கள் மாநாட்டில் பங்கேற்க நெல்லை
வந்தார்.
அவருக்கு ரயில்வே ஸ்டேஷனில் மாவட்ட செஞ்சிலுவைச்சங்கம் சார்பில்
வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநில துணைத்தலைவர் பிரபாகர், மாவட்ட
செஞ்சிலுவைச்சங்க துணைத்தலைவர் ஜெபசிங் செல்வின், பொருளாளர் சொக்கலிங்கம்,
நான்குநேரி கிளை செயலாளர் பர்னபா, மதுரை டிரேசிங் அலுவலர் கோபால், இளையோர்
செஞ்சிலுவை சங்க அமைப்பாளர்கள் கர்ணன், கனகமணி, ஐயப்பகுமார், கணபதி
சுப்பிரமணியன், கோபால், பரமேஸ்வரன், பாலமுருகன் உட்பட பலர்
பங்கேற்றனர்.பாளை. ஜோசப் மெட்ரிக் பள்ளி இளையோர் செஞ்சிலுவைச்சங்க
மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். குற்றாலம் மாநாட்டில் முக்கிய
முடிவுகள் எடுக்கப்படும் என மாநிலத்தலைவர் ஹரீஷ் மேத்தா தெரிவித்தார்.


