/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை அருகே மண்வெட்டியால் தாக்கிபெண்ணை கொலை செய்த மூவர் கைதுநெல்லை அருகே மண்வெட்டியால் தாக்கிபெண்ணை கொலை செய்த மூவர் கைது
நெல்லை அருகே மண்வெட்டியால் தாக்கிபெண்ணை கொலை செய்த மூவர் கைது
நெல்லை அருகே மண்வெட்டியால் தாக்கிபெண்ணை கொலை செய்த மூவர் கைது
நெல்லை அருகே மண்வெட்டியால் தாக்கிபெண்ணை கொலை செய்த மூவர் கைது
ADDED : ஜூலை 23, 2011 02:44 AM
திருநெல்வேலி:நெல்லை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:நெல்லை அருகே தெற்கு
புளியம்பட்டியை சேர்ந்த ராமராஜ் மனைவி ஜெயசீலி(38). இவர் சகோதரி பொன்மணியை
அதே ஊரை சேர்ந்த செல்வம் திருமணம் செய்திருந்தார். கருத்துவேறுபாடு
ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பொன்மணி இறந்தார்.
பொன்மணிக்கு சொந்தமான பொருட்களை அவர் குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர்.
கால்நடைகள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் தொட்டியை ஜெயசீலி
எடுத்துச்சென்றார்.
சம்பவத்தன்று செல்வம், அவர் பெரியப்பா ஞானராஜ், அவர் மகன் சுரேஷ் ஆகியோர்
ஜெயசீலி வீட்டுக்கு சென்று தண்ணீர் தொட்டியை திருப்பிக்கேட்டனர். அதை
திருப்பித்தர ஜெயசீலி மறுத்தார். அவருக்கும், செல்வம் தரப்புக்கும் இடையே
தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த மூவரும் ஜெயசீலியை மண்வெட்டியால் தாக்கினர்.
படுகாயமடைந்த ஜெயசீலி பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
நேற்று அவர் இறந்தார்.இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் விசாரணை நடத்தி செல்வம்,
ஞானராஜ், சுரேஷை கைது செய்தார்.


