/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்புவிழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு
விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு
விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு
விழுப்புரம் பஸ் நிலையம் அருகே "தளபதி திடல்' பெயரில் ஆக்கிரமிப்பு
விழுப்புரம் : விழுப்புரம் பஸ் நிலையம் அருகே, 'தளபதி திடல்' என்ற பெயரில், அரசுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்ததால் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின், அரசு மற்றும் தனியார் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது, தனியாருக்குச் சொந்தமான பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு, ஏரி புறம்போக்கு பகுதியை சேர்த்து ஆக்கிரமித்துள்ளவர்கள், 'தளபதி திடல்' என்ற பெயரில், தனியார் கண்காட்சி போன்றவற்றிற்கு அனுமதித்து, கட்டணமும் வசூலிக்கின்றனர். வருவாய்த் துறையிலும் இந்த இடத்திற்கு அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த இடம், அரசுக்குச் சொந்தமானதா, தனியாருடையதா என்ற சர்ச்சை எழுந்து கலெக்டருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நேற்று காலை விழுப்புரம் பஸ் நிலையப் பகுதிகளை, திடீர் ஆய்வு செய்த கலெக்டர் மணிமேகலை, டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் ஆகியோர், பஸ் நிலையத்திலிருந்து கழிவு நீர், மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அப்போது, அருகே ஏரி புறம்போக்கு பகுதியிலிருந்த திடலில் பொருட்காட்சி அரங்கு வைத்திருந்த இடத்தை, கலெக்டர் மணிமேகலை பார்வையிட்டார். இந்த இடம் அரசுக்குச் சொந்தமானதா, தனியாருடையதா என விளக்கம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த வருவாய்த் துறையினர், இது, அரசுக்குச் சொந்தமான இடம்தான், ஆனால் தனியாரிடம் உள்ளது என, மழுப்பினர். ஏரிப்பகுதி இடம் தனியாருக்கு எப்படி போனது. இந்த இடத்தை பராமரிப்பது யார். பொருட்காட்சி நடத்த யார் அனுமதி கொடுத்தது என கேட்டபோது, அதிகாரிகள் விழித்தனர். இந்த இடத்தின் முழு விவரங்களையும், உடனே தெரியப்படுத்த வேண்டும். வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வெளியேற வழி செய்ய வேண்டுமென, அதிகாரிகளிடம் கலெக் டர் உத்தரவிட்டார்.


