Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்ச நிர்வாகிகள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தீவிரம்

கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்ச நிர்வாகிகள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தீவிரம்

கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்ச நிர்வாகிகள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தீவிரம்

கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்ச நிர்வாகிகள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தீவிரம்

ADDED : ஆக 11, 2011 02:50 AM


Google News
காங்., கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சும் வகையில், பல்வேறு மட்டங்களில் கட்சி நிர்வாகிகளை நியமிக்க, காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளார். புதுச்சேரி காங்., கட்சியில் உட்கட்சித் தேர்தலை நடத்த காங்., மேலிடம் நடவடிக்கை எடுத்தது. தேர்தல் அதிகாரியாக பாலாஜி நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதற்கிடையில், சட்டசபை தேர்தல் வந்ததால், உட்கட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தேர்தலில் காங்., கட்சி தோல்வியை தழுவியது. ஆளுங்கட்சி அந்தஸ்தை இழந்து எதிர்கட்சி வரிசைக்கு காங்., சென்றுள்ளது. தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருந்த காங்., எதிர்கட்சியாக அமர்ந்துள்ளதால், காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் மனச்சோர்வு அடைந்துள்ளனர். எனவே, கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சும் வகையில், கட்சியின் தேர்தல் அதிகாரி பாலாஜியுடன் கைகோர்த்து, கட்சியினருக்கு பல்வேறு பதவிகளை வாரி வழங்க மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தீவிரமாக களமிறங்கி விட்டார். ஏற்கனவே, 21 தொகுதிகளுக்கு வட்டார காங்., தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளுக்கான வட்டார காங்., கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்து தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட தொகுதிகளுக்கும் நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வட்டார காங்., கமிட்டியில் தலைவர், பொருளாளர், துணைத் தலைவர்கள் 3 பேர், பொதுச் செயலாளர்கள் 4 பேர், செயலாளர்கள் 6 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 6 பேர் என 21 பேர் இடம் பெற்று இருப்பர். புதுச்சேரியில் உள்ள 4 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், மாவட்ட கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. தற்போது, மாவட்ட கமிட்டி அமைக்கவும் ஏ.வி.சுப்ரமணியன் முயற்சி எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்களிடம் இருந்து பெயர்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கமிட்டியில் 31 நிர்வாகிகள் இடம் பெற்று இருப்பர். இதைதவிர, பூத் அளவில் காங்., கமிட்டி அமைக்கவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. பூத் கமிட்டியில் தலைவர், துணைத்தலைவர், பொரு ளாளர், செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் 3 பேர் என 7 நிர்வாகிகள் இடம் பெற்று இருப்பர். காங்கிரசாருக்கு கட்சி பதவிகளை தாராளமாக வழங்குவது, பலருக்கு பதவி உயர்வு தருவதன் மூலம் கட்சிக்கு புத்துணர்வு கிடைக்கும்;கட்சி நடவடிக்கைகள் வேகம் பெறும் என்ற அடிப்படையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

-நமது சிறப்பு நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us