/உள்ளூர் செய்திகள்/சென்னை/"பார்க்கிங் ஏரியா'வாக மாறிய ரேடியல் சாலை"பார்க்கிங் ஏரியா'வாக மாறிய ரேடியல் சாலை
"பார்க்கிங் ஏரியா'வாக மாறிய ரேடியல் சாலை
"பார்க்கிங் ஏரியா'வாக மாறிய ரேடியல் சாலை
"பார்க்கிங் ஏரியா'வாக மாறிய ரேடியல் சாலை
UPDATED : செப் 18, 2011 04:23 AM
ADDED : செப் 17, 2011 10:33 PM
பல்லாவரம் : பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, தனியார் லாரிகள் மற்றும் டிராவல்ஸ் வாகனங்களின் பார்க்கிங் ஏரியாவாக மாறி வருவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
போக்குவரத்து போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜி.எஸ்.டி., சாலையையும், பழைய மகாபலிபுரம் சாலையையும் இணைக்கும் வகையில், பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையே, ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இச்சாலை அமைக்கப்பட்டாலும், பல்லாவரத்தில் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்த பின், கடந்த ஆண்டில் இருந்து தான், வாகன போக்குவரத்திற்கு முழுமையாக பயன்பட்டு வருகிறது.கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இச்சாலை இணைப்பதால், வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. பாலம் திறக்கப்பட்ட பின் மாநகர பஸ்களும், அதிகளவில் இச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ரேடியல் சாலை சரியான பராமரிப்பில்லாததால், குண்டும் குழியுமாக படுமோசமாக காணப்படுகிறது.மேலும், இச்சாலையில் தனியார் கழிவுநீர் லாரிகள், குடிநீர் லாரிகள், கனரக வாகனங்கள், ஐ.டி., கம்பெனிகளுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் இயக்கப்படும் பஸ், கார்கள் உள்ளிட்ட ஏராளமான தனியார் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன.குறிப்பாக, பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் லாரிகள், அதிகளவில் சாலையில் இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், சமீபகாலமாக ரேடியல் சாலையில் விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், பார்க்கிங் செய்யும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.