/உள்ளூர் செய்திகள்/மதுரை/திருமணமான பெண் கடத்தல்: 3 பேர் மீது வழக்குதிருமணமான பெண் கடத்தல்: 3 பேர் மீது வழக்கு
திருமணமான பெண் கடத்தல்: 3 பேர் மீது வழக்கு
திருமணமான பெண் கடத்தல்: 3 பேர் மீது வழக்கு
திருமணமான பெண் கடத்தல்: 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 26, 2011 12:48 AM
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் மணிமேகலை(28).
இவருக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரின் 8 வயது மகன் சண்முகம் வீட்டில் தங்கி இங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறான். மகனைப் பார்ப்பதற்காக மணிமேகலை அடிக்கடி சொந்தஊருக்கு வந்துசெல்லும்போது, இதே ஊரைச் சேர்ந்த கங்காதரனுடன்(22) பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் கள்ளக்காதலாக மாறியதில் கடந்த 14ம் தேதி இருவரும் தலைமறைவாகினர். தனது மகளைக் கங்காதரன் மற்றும் உதினிப்பட்டியைச் சேர்ந்த பிரபு, கணேசன் ஆகியோர் சேர்ந்து கடத்தியதாக சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கொட்டாம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


