/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஓய்வின்றி வேட்பாளர்கள் தீவிரம்தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஓய்வின்றி வேட்பாளர்கள் தீவிரம்
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஓய்வின்றி வேட்பாளர்கள் தீவிரம்
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஓய்வின்றி வேட்பாளர்கள் தீவிரம்
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஓய்வின்றி வேட்பாளர்கள் தீவிரம்
ADDED : அக் 11, 2011 01:40 AM
தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
அதிகாலையில் துவங்கி இரவு வரையில் ஓய்வின்றி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து மூன்று உள்ளாட்சி பதவிகளுக்கு மூன்று கட்டமாக தேர்தல் நடக்கிறது. தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - காங்கிரஸ் - பா.ம.க., - பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் உட்பட 13 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 33 வார்டுகளிலும் அதே போன்று அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.தர்மபுரி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு வரும் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்க இருப்பதால், 15ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வர இருப்பதால், தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அதே போல் 17ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கும் கடத்தூர், கம்பைநல்லூர், பாப்பாரப்பட்டி, பென்னாகரம் ஆகிய டவுன் பஞ்சாயத்துக்களிலும் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.தர்மபுரி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் சுமதி, தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி, தே.மு.தி.க., வேட்பாளர் டாக்டர் இளங்கோ ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. மற்ற அரசியல் கட்சியினரும் தேர்தல் களத்தில் சளைக்காமல் போட்டி போட்டி மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரையில் அ.தி.மு.க., வேட்பாளர் சுமதி கட்சி நிர்வாகிகளுடன் அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து தீவிர ஆதரவு கேட்டு வருகின்றனர். தி.மு.க., வேட்பாளர் கந்தசாமியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரம் தி.மு.க., நகர பொறுப்பாளர் சிட்டி முருகேசன் சுயேச்சையாக களம் டறங்கி இவரும் தனது பங்கிற்கு தீவிர பிரச்சாரத்தில் கடந்த சில நாட்களாக இறங்கியிருப்பது தி.மு.க.,வுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.தே.மு.தி.க., வேட்பாளர் டாக்டர் இளங்கோவனுக்கு ஆதரவாக சமீபத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்திருப்பது, அக்கட்சியினர் தேர்தல் பணிகளில் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.காங்கிரஸ் வேட்பாளர் மோகன், பாரதிய ஜனதா வேட்பாளர் பிரபாகரன் ஆகியோர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதும் மற்ற கட்சிகளை ஒப்பிடும் போது, தேர்தல் பரபரப்பு மந்த நிலையில் உள்ளது.பா.ம.க., வேட்பாளர் புனிதா மக்கள் கூடும் இடங்களில் நோட்டீஸ்களை விநியோகம் செய்து ஓட்டு கேட்டு வருகின்றார். நேற்று முன்தினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வாக்கிங் வந்தவர்களிடம் ஓட்டு சேகரித்தார். பிரச்சாரத்துக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் காலை முதல் இரவு வரையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.அந்தந்த கட்சியின் சார்பில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் இணைந்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுயேச்சைகளும் பொது மக்களை தங்கள் ஆதரவாளர்களுடன் சந்தித்து தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருவதால், தெருக்களில் எங்கு பார்த்தாலும் எதாவது ஒரு வேட்பாளர் ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது.


