sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/அஸ்ஸி (ஹிந்தி)

அஸ்ஸி (ஹிந்தி)

அஸ்ஸி (ஹிந்தி)


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன குளத்தில் கல்லெறியும் படைப்பு

டில்லியில் கணவன், மகனுடன் வசிக்கும் பரிமா, ஐந்து மிருகங்களால் பலாத்காரத்திற்கு ஆளாகிறார். சந்தேக அடிப்படையில் ஐவர் மீதும் வழக்கு பதிவாக, குற்றவாளிகளின் அடையாளத்தை பரிமாவால் உறுதிப்படுத்த இயலாத நிலை; வழக்கின் பயணம் எப்படி?

பிங்க் திரைப்படம் போல இதன் திரைக்கதையும் ஒரு பலாத்கார வழக்கை சுற்றியே நீதிமன்றத்தில் சுழல்கிறது; அப்படம், பெண்களின் நடத்தை, விருப்பம் குறித்து விவாதித்தது; இது, பாலியல் வழக்கு விசாரணை மற்றும் சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றிப் பேசுகிறது!

'இந்தியாவில் சரா சரியாக தினமும் 80 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன' என்கிற புள்ளிவிபரம், 'இது கடந்து செல்லத்தக்க குற்றமே' எனும் இந்திய ஆண்களின் மனோபாவத்தை காட்டும் அடிப்படையில் பின்னப்பட்ட கதை; பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையில் இருந்து சூழ்நிலைகளை அணுகும் கண்ணோட்டம் புதிது!

'இச்செயலை செய்தது அவன்தானா என்று தனக்கு உறுதிபடத் தெரியாது; ஆனால், அவனது மரணம் தனக்கு நிம்மதியைத் தருவதாக கருதும் பரிமா, 'ஒரு மனுஷன் செத்ததுக்காக சந்தோஷப்படுற மனசு எனக்கு வந்துடுச்சே' என்று விம்முகையில் ஆண் வர்க்கம் தலைகுனிந்தாக வேண்டும்!

'சென்டிமென்ட்' பிழியும் காட்சிகள், வீராவேச மிகை வசனங்கள் இல்லை; ஆனால், 'ஆண்டுக்கு 30 ஆயிரம் பெண்கள் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் நாட்டில், ஒரு வழக்கின் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவது நீதி ஆகுமா' உள்ளிட்ட மனதை தொந்தரவு செய்யும் கேள்விகள் நிறைய!

'பாலியல் குற்றவாளிகளை 'என்கவுன்டர்' செய்வது, நாயகன் அவர்களை வதம் செய்வது போன்ற பொது சமூகத்தின் எதிர்பார்ப்புகள் எவ்வளவு ஆபத்தானவை' என்பதையும் விளக்கி இருப்பது சிறப்பு!

'ஒவ்வொரு 20 நிமிடத் திற்கும் ஒரு பாலியல் குற்றம் நிகழ்கிறது' எனும் செய்தியை, ஒவ்வொரு 20வது நிமிடத்திலும் திரையில் காட்டுகிறார் இயக்குனர் அனுபவ் சின்ஹா; 'சுரீர்ர்ர்ர்...' என்கிறது.

ஆக...

'சமூகத்திற்கான இப்பொறுப்பில் உன் பங்கு என்ன' என்று நம்மை உலுக்கும் படைப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us