தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா

மிஸ்டர் மூளைக்காரன் தமிழண்டா


PUBLISHED ON : மே 03, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 03, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமஸ்தே... மேரா பாபா மர்கயா!

செல்வம்... பையன் என்ன சொல்றான்?

ஹி... ஹி... ஹி... நீ 'இருமொழி கொள்கை'யில படிச்ச ஆளுல்ல... அதான் உனக்குப் புரியலை; அது வேற ஒண்ணுமில்ல வேலு... இதுநாள் வரைக்கும் தனக்கு கூடுற கூட்டத்தை தன் அந்தஸ்தா சொல்லிட்டு இருந்த கட்சி தலைவருங்க, த.வெ.க., தலைவர் பிரசாரத்துக்கு கூடின கூட்டத்தை கேலி பண்ணுனாங்க இல்லையா... அதுக்காக நாளைக்கு வருத்தப்பட வாய்ப்பு இருக்கான்னு கேட்குறான்!

இல்லை... அவன் அப்படி கேட்கலை; நீ ஏதோ புரியாம சொல்றே...

அப்படிங்கறே... இரு; தம்பி... இன்னொருக்கா நீ சொன்னதை சொல்லுய்யா!

நமஸ்தே... மேரா பாபா மர்கயா!

ஓ... அதுவா... வேலு... இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு! அது... 'அரசு இயந்திரம் எந்த அடிப்படையில இயங்குது'ன்னு அறியாத ஒரு நடிகர், நம்ம 'நம்பர் ஒன்' முதல்வரோட நிர்வாகம் மேல அடுக்கடுக்கா குற்றச்சாட்டுகளை வைச்சிட்டு இருந்தப்போ, அதுக்கு பதில் சொல்லாம, ஒரு போட்டோவை காமிச்சு பிரசாரத்துல 'ஜோக்' அடிச்சுட்டு இருந்தாருல்ல துணை முதல்வர்... அது சரிதானான்னு கேட்குறான்!

ம்ஹும்... அவன் சின்னதா ஏதோ சொல்றான்; ஆனா, நீ என்னென்னவோ சொல்றே!

என்னா வேலு... ராகுல் காந்தி சொன்னதா செல்வப்பெருந்தகை சொன்னதுக்கு எல்லாம் கைதட்டுனே... என்னை சந்தேகப்படுறியே; சரி... இரு... இன்னும் ஒரே ஒருதரம் அவனை சொல்லச் சொல்லி கேட்டுட்டு கரெக்டா சொல்றேன் பாரு! தம்ம்ம்ம்பி...



நமஸ்தே... மேரா பாபா மர்கயா!


ஹைய்யா... புடிச்சுட்டேன்... புடிச்சுட்டேன்; அண்ணாதுரையை எதிர்த்து பக்தவத்சலம் தோற்ற மாதிரி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எதிர்த்து கருணாநிதி தோற்ற மாதிரி, கருணாநிதியை எதிர்த்து ஜெயலலிதா தோற்ற மாதிரி, 'தோல்வியும் கவுரவம் தரணும்னா யார்கிட்டே தோற்குறோம்ங்கிறது ரொம்ப முக்கியம்'னு சொல்றான்!

இதோ பார் செல்வம்... மறுபடியும் நீ பொய் சொல்றே!

சரிப்பா... உண்மையை சொல்லிடுறேன்; 'அப்பா' அவுட்டாம்!

அப்பா... ஆஆஆஆ...

யோவ் வேலு... அவன் 'அப்பா'வைச் சொல்றான்யா; ஆமா... இப்போ நீ அழுறமாதிரி ச்சும்மாக்காச்சுக்கும் நடிச்சதானே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us