Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!

ஏழரை கேள்விகள்!


PUBLISHED ON : ஏப் 12, 2026

Follow on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'த.வெ.க., தலைவர் சி.ஜோ சப் விஜயிடம் நடிகர் விஜயைக் கண்டு ஆர்ப்பரிக்கும் பெரும் கூட்டம், அவரிடம் இக்கேள்விகளை எப்போது கேட்கும்' எனும் ஆவலோடு காத்திருக்கின்றனர் தமிழகத்தின் சில ஆசிரியர்களும், சில பெற் றோ ர்களும்...

1. 'தன்னையும் தன் மண்ணையும் ஆள வசீகர தோற்றமும், நடிப்பாற்றலும், குஷியூட்டும் நடனத்திறனும் இருந்தால் போதும்; நிர்வாகத்திறன் பற்றிய ஆராய்ச்சிகள் எதற்கு' எனக் கேட்கும் இளைஞன் தமிழகத்தின் பெருமையா வி ஜய்?

2. 'இந்த தேர்தலில் தோற்று முதல்வர் கனவு கலைந்தாலும் மீண்டும் திரைத்துறைக்கு திரும்ப மாட்டேன்; உங்களில் ஒருவனாக நிற்பேன்' எனும் தங்களின் சத்தியத்தை இனிவரும் பிரசார கூட்டங்களிலாவது நாங்கள் எதிர்பார்க்கலாமா?

3. மணல் வீடு விரும்பிய தங்களுக்கு மாளிகை தந்த மக்களை, 'கடவுள்' என்கிறீர்கள் சரி; ஆனால், சொந்த பணத்தை கரைக்காது மக்களது வரிப்பணத்தில் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புவது எப்படி நன்றிக்கடன் தீர்ப்பதாகும்?

4. இதுவரை காணாத மாற்றத்தை தரப்போவதாக சொல்லும் நீங்கள், கடந்த ஆட்சிகளுக்கு ஏதோ ஒருவகையில் காரணமான மூத்த அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து நிற்பது எந்த வித்தையை கற்றுக் கொள்வதற்காக விஜய்?

5. மனசாட்சியோடு சொல்லுங்கள்... 'அதிகாரத்தில் பங்கு' எனும் உங்களின் வலையில் பல கட்சிகள் சிக்கி கூட்டணி அமைந்திருந்தால், தங்களது கார் ஓட்டுனர் மகனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்குமா?

6. ஒருவேளை நீங்கள் ஆட்சிக்கு வந்து, உங்கள் ஆட்சியின் கீழ் பயிலும் மாணவ சமூகம் ஒரு நடிகரின் பின்னால் கண் மூடித்தனமாக விசிலடித்துப் போகிறது எனில் தமிழகத்தின் மாண்புமிகு முதல்வராக பெருமிதம் கொள்வீர்களா?

7. '234 தொகுதிகளிலும் நிற்பது உங்கள் விஜய்... விஜய்...' என்றுதான் மதுரை மாநாட்டில் சொன்னீர்களே தவிர, 'ஜோசப் விஜய்' என்று சொல்லவில்லை; ஒளித்து வைத்திருந்த 'ஜோசப்' இன்று வெளிவர என்ன காரணம் விஜய்?

7 ½ 'காமராஜரே ஜனநாயகன்' என்றால் மறுப்பீர்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap