Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/அவியல்/கல்லும் கலையும்: ஆறறிவு தாய்மை - ஐந்தறிவு பாசம்; பந்தி வைக்கும் சிற்பம்

கல்லும் கலையும்: ஆறறிவு தாய்மை - ஐந்தறிவு பாசம்; பந்தி வைக்கும் சிற்பம்

கல்லும் கலையும்: ஆறறிவு தாய்மை - ஐந்தறிவு பாசம்; பந்தி வைக்கும் சிற்பம்


PUBLISHED ON : மார் 29, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்பகோணத்தில் இருந்து ஏழு கி.மீ., தொலைவில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் இருக்கிறது இச்சிற்பம்!

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்து இக்கோவிலின் சிற்பங்கள் தாராசுரம் கோவில் சிற்ப பாணியை நினைவூட்டினாலும், முன் மண்டப சுற்றுச்சுவரில் வடக்குப்பக்க கோமுகத்துக்கு அருகில், யானைக் கன்றுகளின் பசியாற்றும் பெண்ணின் சிற்பம்... தனித்துவம்!

வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்திருப்பவள், வலப்புற கொண்டையுடன் காதுகளில் பெரிய குழை அணிந்திருக்கிறாள்; தோள், கைகள், இடையில் வசீகர ஆபரணங்கள்; அவளது அருகில் முன்னங்கால்கள் துாக்கி துள்ளியபடி இரண்டு யானை கன்றுகள்!

இவை அழகெனில் அவளது செயல்... ஆம்... வலக்கையால் இடது மார்பை ஏந்தி யானைக் கன்றின் பசியாற்றுகிறாள். தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில்... பசியாறும் குதுாகலம் கன்றின் முகத்தில்; ரசித்து செதுக்கி இருக்கிறார் சிற்பி; அருகிருக்கும் பிறிதொரு கன்றின் முகத்தில் ஏக்கம் கலந்த மகிழ்ச்சி!

'மன பாரங்களோடு கோவில்களுக்கு வரும் பக்தர்கள், இதுபோன்ற பிரகார சிற்பங்களில் லயித்து தங்களின் மனக்காயங்களுக்கு மருந்து தடவிக் கொள்கின்றனர்; இந்த சிகிச்சை கூட சிற்பியின் நோக்கமாக இருந்திருக்கலாம்' என்று, கலைக்கு அற்புத விளக்கம் தருகிறார் கோவிலின் மூத்த குருக்களான சுந்தரமூர்த்தி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap